×

சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது..2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் நேரடியாக தரிசனம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் மிதுன லக்கினத்தில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருக்கல்யாணத்தை 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்கின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிகழ்வை காண ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. ரூ.200 கட்டணத்திற்கான 2,500 சீட்டுகள்  உள்ளிட்ட 6 ஆயிரம் சீட்டுகளுக்கே அனுமதிப்பதாக கூறப்பட்ட நிலையில், பக்தர்கள் ஆர்வத்தோடு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்து இருந்தனர்.

இத்திருக்கல்யாண நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள் அனைவரும் நாளை காலை 07.00 மணி முதல் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கோபுர நுழைவு வாசல்களில் பரிசோதனைக்கு பின்பு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.  

மேலும் மீனாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாணத்தையொட்டி 2 டன் வண்ண மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Thirukkalyana , The major occurrence of the April Festival takes place in the traffic
× RELATED ஆக்கூர் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்