×

இருளர் இனத்தை சேர்ந்த 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை

திருத்தணி: தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திருத்தனி அருகே கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட 300 பேருக்கு அரசு சார்பில் செங்கல் சூலை அமைத்து வாழ்வாதாரம் பெருக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீரகநல்லூர் கிராமத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கபட்ட இருளர் இனத்தை சேர்ந்த 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. அதனை தொடந்து அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது அதன் படி மாவட்ட நிர்வாகம் சார்பின் படி சுமார் ரூ 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வீரகநல்லூர் கிராமம் பகத்சிங் நகரில் செங்கல்சூளை அமைத்து தரபட்டது இதற்கான தொடக்க விழாவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.


செங்கல் சூளைக்கு தேவையான அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு இருக்கிறது அதன் மூலம் செங்கல்சூளை அமைத்து வாழ்வாதாரத்தை பெருகி கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. செங்கற்களை விற்று கிடைக்கும் வருமானம் மூலம் மூலப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி கொள்ளவும் அவர்களை மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் தொண்டு நிறுவன ஒத்துழைப்புடன் இதற்கான பணிகள் நடைபெறுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மேலும் திருத்தணி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்கு 50ஆயிரம் மதிப்பீட்டில் கத்தி போன்ற வெட்டு இயந்திரங்களை வாங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : Free housing for 30 dark families
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...