×

திருத்தணி அருகே கொத்தடிமைகளாக இருந்த 300 பேருக்கு சொந்தமாக செங்கல் சூளை அமைத்து கொடுத்த மாவட்ட நிர்வாகம்..!!

திருவள்ளூர்: திருத்தணி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலைபார்த்தவர்களை முதலாளிகளாக மாவட்ட நிர்வாகம் மாற்றியுள்ளது. கொத்தடிமைகளாக இருந்த 300 பேருக்கு சொந்தமாக செங்கல் சூளை அமைத்து கொடுக்கப்பட்டது. 30 குடும்பங்களை சேர்ந்த 300 பேருக்காக ரூ.5.80 லட்சத்தில் செங்கல் சூளை அமைக்கப்பட்டன. செங்கல் விற்பனை, ஊதியம் உள்ளிட்டவற்றுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் உதவும் எனவும் மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.


Tags : Thiruthani , Revival, bondage, brick kiln, district administration
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...