×

சென்னை அண்ணாசாலையில் அமையவிருக்கும் மேம்பாலத்தின் குறிப்புகள், வரைபடங்கள் மற்றும் மாதிரி காணொலி தொகுப்பு

சென்னை: 12.4.2022 அன்று சட்டப்பேரவையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்ட சென்னை அண்ணாசாலையில் அமையவிருக்கும் மேம்பாலத்தின் குறிப்புகள், வரைபடங்கள் மற்றும் மாதிரி காணொலி தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம்
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணா சாலையையும், சென்னை மாநகரையும் பிரித்துப் பார்க்கவே இயலாது. மாநகரின் மிகப் பிரதானச் சாலை என்பதால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் மிகுதியாக காணப்படும்.

அண்ணாசாலையில் இந்திய ராணுவத்தின் தென்மண்டலத் தலைமையகம். ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை, எல்.ஐ.சி. அமெரிக்க துணை தூதரகம், மருத்துவ இயக்குனரகம் மற்றும் பல அரசு அலுவலகத் தலைமையகங்கள். கல்வி நிறுவனங்கள், பல்நாட்டு வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள். வங்கித் தலைமையகங்கள், பல மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருவதால், இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

குறிப்பாக தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.5 கி.மீ நீளத்தைக் கடக்கவே சராசரியாக 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது. இப்பகுதிக்குட்பட்ட அனைத்து சாலை சந்திப்புகளிலும், வாகனங்கள் அணிவகுத்து மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழலையும் காணமுடிகிறது. இதிலும் குறிப்பாக நந்தனம் சந்திப்பு, CIT நகர் சந்திப்பு ஆகியவற்றால், காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு காத்திருப்பது அன்றாட வாடிக்கையாகியுள்ளது. ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளும் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகின்றது. மேலும் பேரிடர்க் காலத்தில் மக்களின் போக்குவரத்திற்கு பாலமாக உள்ளதும் அண்ணா சாலையே.

இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தேனாம்பேட்டையிலிருந்து - சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளை அண்ணாசாலையுடன் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தி.நகர், பாண்டிபஜார் பகுதிகளை இணைக்கும் தியாகராயா சாலை சந்திப்பு, டி.டி.கே சாலையை அண்ணாசாலையுடன் இணைக்கும் SIET கல்லூரி சாலை சந்திப்பு. செனடாஃப் சந்திப்பு, கோட்டூர்புரம், போட்கிளப், பசுமைச் சாலை வழிச்சாலை வெங்கட்நாராயணச் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலையை வந்தடையும் சென்னை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான நந்தனம் சந்திப்பு.

தி.நகர் நிலையம், உஸ்மான் சாலைகளை இணைக்கும் CIT நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதானச் சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையிலுள்ள தாடண்டர் நகர் - ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றை கடக்கும் வகையில் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கி.மீ நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை ரூபாய் 485 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
இந்தச் செய்தித் தொகுப்புடன் மேம்பாலத்தின் மாதிரி வரைபடமும், மாதிரி காணொலியும் இணைக்கப்பட்டுள்ளது.  மாதிரி காணொலியைப் பார்க்க QR Code Scan செய்யவும்.

Tags : Anna Salai, Chennai , Chennai Annasalai, to be built, flyover
× RELATED சென்னை அண்ணாசாலையில் கட்டிடத்தில் தீ விபத்து