×

பள்ளி மாணவியை ஏமாற்றி உல்லாசம்: காதலியின் அம்மாவையும் மிரட்டி உறவுக்கு அழைத்த காமக்கொடூரன் கைது

திருவெறும்பூர்: திருச்சி அருகே பள்ளி மாணவியுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டதோடு, தனிமையில் இருந்த போட்டோ, வீடியோவை வெளியிடுவதாக காதலியின் தாய்க்கு மிரட்டல் விடுத்து, அவரையும் உறவுக்கு அழைத்த கல்லூரி மாணவர் போக்சோவில்  கைது செய்யப்பட்டார். திருச்சியை சேர்ந்தவர் 16வயது சிறுமி. ஒரு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். வேலூர் விருஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மார்க்கபந்து. இவரது மகன் கோகுல்(20). தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படித்து வருகிறார்.

கடந்த 2019ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் கோகுலுக்கும், 16வயது சிறுமிக்கும்  பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 2022 ஜனவரி 5ம் தேதி கோகுல் சிறுமியிடம், தனது பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்ப்பதாக தெரிவித்ததோடு, திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அறையில் தங்கி இருப்பதாகவும், தன்னை நேரில் வந்து சந்திக்கும்படியும் கூறினார். இதனை நம்பிய சிறுமியும், பெற்றோருக்கு தெரியாமல் கோகுல் தங்கிருந்த அந்த தனியார் ஓட்டலுக்கு ஜனவரி 6ம் தேதி சென்றார்.

அங்கு கோகுல் திடீரென சிறுமிக்கு தாலி கட்டினார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தனர். பின்னர் சிறுமி வழக்கம்போல் வீட்டிற்கு சென்றார். இந்த சம்பவத்தை சிறுமி, வீட்டில் மறைத்து வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வந்தார். கோகுல் திருச்சிக்கு அடிக்கடி வரும்போதெல்லாம், சிறுமியை ஓட்டலுக்கு வரவழைத்து உல்லாசமாக இருக்கும் போது அவருக்கு தெரியாமல் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் காதல் விவகாரம் அவரது தாய்க்கு ஏற்கனவே தெரியும்.

இதனால் கோகுல், சிறுமியின் தாயாரிடம் அடிக்கடி போனில் பேசி வந்தார். இந்தநிலையில் கோகுல், அவசர தேவைக்காக ரூ.10 ஆயிரம் பணம் தேவைபடுவதாக சிறுமியின் தாயாரிடம் கேட்டார்.  அவர் பணத்தை தர மறுக்கவே, உனது மகளிடம் தனிமையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார். ஒரு கட்டத்தில் புகைப்படத்தை வெளியிடாமல் இருக்க சிறுமியின் தாயாரையும், கோகுல் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் தாய் கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோகுலை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிடம் தனிமையில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க  உறவுக்கு வருமாறு மாணவியின் தாயாரை கோகுல் மிரட்டியுள்ளார்.

Tags : Kamakkoduran , Schoolgirl tricked into having sex: Kamakkoduran arrested for intimidating girlfriend's mother
× RELATED 3வது நபருடன் தாய் ஓட்டம் பிடித்த...