×

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் பழங்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு: மாதுளை ₹250; ஆரஞ்சு 70க்கு விலை எகிறியது

சென்னை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் நேற்று பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தன. சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டிற்கு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து  தினசரி 150 முதல் 200க்கும் மேற்பட்ட  வாகனங்களில் திராட்சை, மாதுளை, பப்பாளி, கொய்யா, மாம்பழம் என, சுமார்  10 டன் பழங்கள் வருகின்றன. இந்நிலையில், கடந்த மாதம்  ஒரு கிலோ சாத்துக்குடி ₹45 முதல் ₹55 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கிலோ சாத்துக்குடி ₹70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேபோல், ஒரு கிலோ பைன் ஆப்பிள் ₹70க்கு விற்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தர்பூசணி ₹6க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று, ஒரு கிலோ ₹10க்கு விற்பனையானது.ஒரு கிலோ ஆப்பிள் ₹150 முதல் ₹200 வரை விற்கப்படுகிறது. ஒரு வாழைதார் ₹250லிருந்து  ₹500க்கும், ஆரஞ்ச் ₹50லிருந்து ₹70க்கும், பச்சை திராட்சை ₹50லிருந்து ₹80க்கும், அத்திப்பழம் ₹70லிருந்து ₹90க்கும், பப்பாளி  ₹15லிருந்து ₹25க்கும்,  சப்போட்டா ₹20லிருந்து ₹60க்கும்,மாதுளை ₹150லிருந்து ₹250க்கும், கொய்யாப்பழம் ₹30லிருந்து ₹60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, கோயம்பேடு பழ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் கூறியதாவது: கடந்த மாதம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட பழங்கள் அனைத்தும் தெலுங்கு வருடப்பிறப்புக்கு பிறகு விலைகள்  உயர்ந்துள்ளன. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மேலும் 2 மாதம் வரை இந்த விலை நீடிக்கும் என்றார்.



Tags : Coimbatore ,Pomegranate , Fruit prices rise sharply in Coimbatore: Pomegranate ₹ 250; Orange went up in price to 70
× RELATED சென்னை விமான நிலையத்தில் புதிய பிளாசா...