×

பொள்ளாச்சி, தென்காசி, போடியில் வெளுத்து வாங்கும் கனமழை: வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

சென்னை: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சியில் கடுமையான வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மழை பெய்து வருகிறது. போடியில் மதியம் 3 மணி முதல் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.

Tags : Pollachi ,Tengasi ,Boudi , Pollachi, Tenkasi, Bodi, heavy rain
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு...