×

கனமழை எதிரொலி: நாகையை தொடர்ந்து காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!!

சென்னை :கனமழை காரணமாக நாகையை தொடர்ந்து காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக வட இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகையில் சனிக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ் வேளூர், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது. அதேபோல காரைக்கால் பகுதியிலும் நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாகையைத் தொடர்ந்து காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனினும் திட்டமிட்டப்படி இன்று 11ம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என மேல்நிலை கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். இதனிடையே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Tags : Kanadhau ,Karaikala , Heavy rain, Naga, Karaikal, schools, holidays
× RELATED காரைக்கால் அடுத்த நிரவியில்...