சசிகலா பொதுச்செயலாளர் விவகாரம் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு: டிடிவி தினகரன் நம்பிக்கை

தஞ்சை: சசிகலா பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பாக வரும் என நம்புகிறோம் என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி: உலகம் முழுவதும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. இந்தியாவில் அந்தந்த பகுதிகளில் வாழும் மக்கள் அவர்களது மொழியில் பேசுகின்றனர். இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்றாக தான் இந்தி மொழி என ஒன்றிய அமைச்சர் கூறியதாக நான் படித்தேன். மற்றப்படி ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என அவர் கூறியதாக எனக்கு தெரியவில்லை.  சசிகலா பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து வருகிற 11ம் தேதி (நாளை) நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது. நல்ல தீர்ப்பாக வரும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: