சங்கரன்கோவில் சித்திரை திருவிழா; பூம்பல்லக்கில் சுவாமி, அம்பாள் வீதிஉலா: திரளான பக்தர்கள் தரிசனம்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் சித்திரை திருவிழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி, அம்பாள் பூம்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 7ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் காலை, இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

2ம் திருவிழாவான நேற்றிரவு சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட பூம்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. வழி நெடுக பக்தர்கள் திரண்டுவந்து தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் வரும் 15ம்தேதி (வெள்ளி) காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. சித்திரைத் திருநாளில் சுவாமி அம்பாள் இரண்டு தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: