நம்பிக்கையில்லா தீர்மானத்தை செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு

இஸ்லாமாபாத்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த மார்ச் 28ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. ஆளும் கட்சி எம்பிக்கள் மற்றும் ஆதரவு கொடுத்து வந்த கூட்டணி கட்சிகள் எதிர் அணியினருடன் சேர்ந்து கொண்டதால், இம்ரான் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆட்சி கவிழும் என்பதால், தீர்மானத்தை கடைசி நேரத்தில் துணை சபாநாயகர் ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில் அந்நாட்டு அதிபர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதனால், பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உருவானது. 90 நாட்களில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த பாகிஸ்தான் அரசு கூறியது. ஆனால் தேர்தல் ஆணையம் குறுகிய காலகட்டத்தில் தேர்தலை நடத்தி முடிக்க முடியாது என்று தெரிவித்தது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்திய நிலையில், வழக்கின் முடிவில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் இன்று நடைபெற இருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Related Stories: