×

ரஷ்யாவை முன்மாதிரியாக பின்பற்றும் ஈரான்!: ரியால் நாணய அடிப்படையில் கச்சா எண்ணெய், எரிவாயு விற்பனை செய்ய முடிவு..!!

ஈரான்: ரஷ்யாவை முன்மாதிரியாக பின்பற்றி ஈரானும் அதன் நாணயமான ரியாலில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. ரஷ்யாவின் ரூபிள் போல், ரியாலும் ஈரானில் தங்கத்திற்கு இணையாக மதிப்பிட இருக்கிறது. இதனையடுத்து ஈரான் விரைவில் ரியால் தங்க மாற்று விகிதத்தை அறிவிக்கக்கூடும் என்று தெரிகிறது. இது எண்ணெய் மற்றும் எரிவாயுவை ரியால் அல்லது தங்கத்தில் வாங்குவதற்கு ஊக்கமளிக்கும் என்று கூறப்படுகிறது. ஈரானின் இந்த முடிவால் சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கான விருப்ப நாணயமாக இருக்கும் அமெரிக்க டாலருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

கடந்த மாத இறுதியில் ரஷ்யா, எண்ணெய் மற்றும் எரிவாயுவை அந்நாட்டின் கரன்சியான ரூபிள் அல்லது தங்கத்தின் அடிப்படையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 28ம் தேதி ரஷ்யாவின் ரூபிள் கரன்சி மதிப்பு தங்கத்தின் விலையோடு இணைக்கப்படுவதாக அந்நாட்டின் தலைமை வங்கி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையால் உக்ரைன் மீதான போர் நெருக்கடியால் சரிந்து வந்த ரூபிளின் மதிப்பு சமீபத்தில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதனால் ரஷ்யாவின் வழியை பின்பற்றி ஈரானின் ரியால் மதிப்பில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது.


Tags : Iran ,Russia , Sales of Iran, rial currency, oil and gas
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...