×

தமிழக ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் 'நமக்கு நாமே'திட்டம் செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை; தமிழக ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.50 கோடி ஒதுக்கிய நிலையில், மேலும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டப்பணிகளுக்கான மதிப்பீட்டுத்தொகை மூன்றில் ஒரு பங்கு மக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டடங்கள் இத்திட்டத்தில் கட்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nuru , An allocation of Rs. 50 crore for the implementation of 'Namakku Name' project with the participation of people in the rural areas of Tamil Nadu
× RELATED டெல்லி குடியரசு தின அணிவகுப்பில்...