மாஜி அமைச்சர் சண்முகம் கைது

விழுப்புரம்: விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை வகித்தார். இதில், மாஜி அமைச்சர் வளர்மதி, எம்எல்ஏக்கள் சக்ரபாணி, அர்ச்சுனன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். போலீசாரின் தடை உத்தரவை மீறி இந்த உண்ணாவிரதம் நடந்தது. இதனால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடலூர், புதுச்சேரி மார்க்கத்திலிருந்து வாகனங்கள் முண்டியம்பாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டது. பிற்பகல் வரை இந்த நிலை நீடித்ததால், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மாஜி அமைச்சர் சண்முகம் உள்ளிட்ட 1,200 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: