×

ஈரோடு அருகே தனியார் ஆலை வளாகத்தில் லாரி மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி பலி: இழப்பீடு கேட்டு சக தொழிலாளர்கள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு அருகே தனியார் ஆலை வளாகத்தில் லாரி மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு இழப்பீடு கோரி போராடிய தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 7 போலீசார் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துகுழியில் இயங்கி வரும் SKM பூர்ணா ஆயில் நிறுவனத்தில் நள்ளிவு லாரி மோதிய விபத்தில் பணியில் இருந்த பீகாரை சேர்ந்த காமோத்ராம் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு இழப்பீடு கோரி சக வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தவந்த போலீசார் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். நிறுவனத்தின் பாதுகாவலர் அறையையும் அவர்கள் அடித்து நொறுக்கினர், 4 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இந்த தாக்குதலில் காவல்துறை பெண் ஆய்வாளர் உள்பட 7 போலீசார் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் எடுத்துச்சென்றனர்.

இதனிடையே தனியார் ஆலை வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து நிறுவனத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Erode , Erode, private factory, lorry collision, worker killed, workers protest
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...