×

வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு வாகனம் வாங்க மானியம்: கலெக்டர் விஜயா ராணி தகவல்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு சென்னை மாவட்டத்தில் வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50% இதில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

தமிழகத்தை சேர்ந்தவராக 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எல்.எல்.ஆர். சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து, எண்.62, இராஜாஜி சாலை, சிங்கார வேலர் மளிகை, சென்னை கடற்கரை சாலை, சென்னை-1, மாவட்ட ஆட்சியரகத்தில் 2வது தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். மேலும், விவரங்களுக்கு 044-25241002 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


Tags : Wakfu ,Vijaya Rani , Subsidy for purchase of vehicles for ulama working in Wakfu companies: Collector Vijaya Rani Information
× RELATED தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக 2 நபர்கள் தேர்வு: தமிழ்நாடு அரசு