×

நான் குழந்தைகளை சந்திப்பதை தடுக்க சதி செய்வதாக முன்னாள் மனைவி மோனிகா மீது இசையமைப்பாளர் டி.இமான் புகார்

சென்னை: நான் எனது குழந்தைகளை சந்திப்பதை தடுக்க சதி செய்வதாக முன்னாள் மனைவி  மோனிகா  மீது டி.இமான் புகார் அளித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமான் தன் குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. எனவே மோனிகா  மீது நடவடிக்கை எடுக்குமாறு இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தன்னுடைய இரண்டு குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதாகவும் ஆனால் அதை மோனிகா மறைத்து முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றிருப்பதாகவும் டி.இமான் தனது மனுவில் கூறியிருந்தார்.

இதனால் தனது குழந்தைகளை சந்திக்க விடாமல் செய்யும் சதி செய்கிறார் என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். நான் குழந்தைகளை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கு வழிவகை செய்யும் வகையில் அவர்களை வெளிநாடு அனுப்புவதற்காக இப்படி தவறான தகவலை அளித்து புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார் மோனிகா என கூறியிருந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : D.Iman ,Monica , Composer D Iman complains about ex-wife Monica
× RELATED தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டமளிப்பு விழா