×

உலக தரவரிசைப் பட்டியலில் 3 இந்திய பல்கலை ‘சூப்பர்’

புதுடெல்லி: உலக அளவில் உயா்கல்வி குறித்து ‘குவாக்கரெலி சைமண்ட்ஸ்’ (க்யூஎஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு தனது 18வது சா்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில்படி, மும்பை ஐஐடி 177வது இடத்தையும், டெல்லி ஐஐடி 185வது இடத்தையும், பெங்களூரு ஐஐஎஸ்சி 186வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆராய்ச்சி பிரிவில், உலக அளவில் முதலாவது இடத்தில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி) உள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கூறுகையில், ‘கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா முன்னோடியாக மாறி வருகிறது. இந்திய கல்வித் துறையுடன் தொடா்புடைய மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் இதர தரப்பினா் குறித்து பெருமை கொள்கிறோம்.‘தேசிய கல்விக் கொள்கை 2020’ போன்ற முயற்சிகள் தான், நமது கல்லூரிகள் மற்றும் உயா்கல்வி மையங்களை சா்வதேச அளவில் இடம்பெறச் செய்கின்றன’ என்று தெரிவித்துள்ளார். …

The post உலக தரவரிசைப் பட்டியலில் 3 இந்திய பல்கலை ‘சூப்பர்’ appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Quackerelli Symonds ,QS ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...