திருப்பத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு: முதல்வர் அறிவிப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வேன் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். விபத்தில் இறந்த துர்க்கா, பவித்ரா, சர்மிளா, செல்வன், சுகந்தா மங்கை ஆகியோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சுமார் 22 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.    

Related Stories: