×

மானாமதுரை நகராட்சியில் 16 ஆண்டுகளாக ஒலிக்காத சங்கு ஒலிக்கும்

*நகர்மன்ற கூட்டத்தில் தகவல்

மானாமதுரை : 20 ஆண்டுகளாக மானாமதுரையில் ஒலிக்காத சங்கை சரிசெய்து மக்களுக்கு சரியான நேரத்தை அறிவிக்க மீண்டும் சங்கு ஒலிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட மானாமதுரை நகராட்சியில் முதல் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கினார்.

துணை தலைவர் பாலசுந்தரம், ஆணையர் கண்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை எழுத்தர் கணேசன் நகர்மன்ற தீர்மானங்களை வசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:திமுக கவுன்சிலர் சதீஷ்குமார்: மயிலம் சந்தையை ஏலத்திற்கு விட கூடாது. ஏலத்தில் விடுவதால் விவசாயிகள், தெருவோர சிறுவியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

பாஜ கவுன்சிலர் முனியசாமி(எ)நமகோடி: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சித்திரை திருவிழாவில் தற்காலிக கழிப்பறைகளை அமைக்க வேண்டும். தெருவிளக்குகளை கூடுதலாக அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.
அதிமுக கவுன்சிலர் தெய்வேந்திரன்: நகராட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்படும் போர்வெல்கள் முறையாக செயல்பட வேண்டும்.

சுயேச்சை கவுன்சிலர் பாலாஜி: குடிநீர் குழாய்களை உடனடியாக பழுது நீக்க வேண்டும், குடிநீர் வழங்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்த ஆணையர் கண்ணன், அடுத்த முறையில் இருந்து அதற்கு உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தார். அனைவரின் கருத்துக்களையும் கேட்ட நகர்மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என கூறினார்.

கூட்டத்தில் 2004ம் ஆண்டில் இருந்து மானாமதுரையில் நேரத்தை அறிவிக்கும் பேரூராட்சி சங்கு ஒலிக்கவில்லை. நாகரீக உலகில் சங்கின் பயன் இளைய தலைமுறைக்கும் தெரியவேண்டும். பாரம்பரியம் மறக்காமல் இருக்கவும், பரபரப்பான வாழ்க்கையில் சங்கு ஒலித்து நேரத்தை அறிவிப்பது அவசியம், நடுத்தர ஏழைமக்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு நேரம் குறித்து அறிவிக்க சங்கொலி அவசியம் என்பதால் அதனை மராமத்து செய்து மீண்டும் ஒலிக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Tags : Manamadurai Municipality , Manamadurai,horn will sound,Muncipality
× RELATED மானாமதுரையில் நாய்களுக்கு தடுப்பூசி முகாம்