×

எரிபொருள் கிடைக்காததால் மக்கள் ஆத்திரம்; இலங்கை அதிபர் மாளிகை முற்றுகையால் பதற்றம்: தலைநகரில் ஊரடங்கு உத்தரவு அமல்

கொழும்பு: இலங்கையின் மோசமான வரிக் குறைப்பு மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நியச் செலாவணி கையிருப்புகளை 70 சதவீதம் குறைத்தது போன்றவற்றால், அந்நாட்டில்  இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து  வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் பலமடங்கு விலை உயர்ந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.

மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நகரில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுகிறது. ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், நேற்றிரவு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ‘இலங்கை அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று கோஷமிட்டனர்.

அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றிய அவர்கள்,  ராணுவ வாகனத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் முற்றுகை போராட்டமாக நடந்த சம்பவம் பிறகு வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். தலைநகர் கொழும்புவில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

நகரின் வடக்கு, தெற்கு, மற்றும் மத்திய நுகேகொட காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ெதாடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Chancellor's House ,Curve Order Amal , People angry over lack of fuel; Tension over Sri Lankan Presidential Palace siege: Curfew imposed in the capital
× RELATED இலங்கையில் நிலவும் பொருளாதார...