×

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தடுக்க தவறிய கோட்டாபய ராஜபக்ச அரசை கண்டித்தது அதிபர் வீட்டின் முன் பொதுமக்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் அதீத விலை உயர்வு, 16 மணி நேர மின் வெட்டு, எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகளால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் குதித்துள்ளனர். இலங்கையில் அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் போக்குவரத்து முடங்கியுள்ளது. நிலக்கரி போதிய இருப்பு இல்லாததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான மாகாணங்கள் இருளில் மூழ்கியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, 16 மணி நேர மின் வெட்டு, ஆகியவற்றால் பெரும் அவதிக்கு ஆளான மக்கள் நேற்று இரவு சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச இல்லம் அமைந்துள்ள மிரிஹானா நகர் வென்கிரவட்டை சாலையை போராட்டகாரர்கள் முற்றுகையிட்டதால் பெரும் கலவரம் ஏற்பட்டது.

இதனை அடுத்து கொழும்புவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. உள்ளூர் காவல்துறையுடன் ராணுவ கவச வாகனங்களும் வீதியில் வலம் வந்தன. ஒருகட்டத்தில் காவல்த்துறை வாகனங்கள் மீது மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தின. காவல்துறையின் வணக்கங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

போராட்டம் கலவரமாக மாறியதால் போராட்ட காரர்கள் மீது தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவலர்கள் கலைக்க முயன்றதால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் மாறியது


Tags : Chancellor's House ,Gotabhaya Rajapaksa government ,Sri Lanka , Sri Lanka, Economic Crisis, Gotabhaya Rajapaksa, Public Struggle
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...