×

ராயபுரம் கிழக்கு பகுதி திமுக நிர்வாகி நீக்கம்: துரைமுருகன் உத்தரவு

சென்னை: ராயபுரம் கிழக்கு பகுதி 51வது வட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகியை, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தற்காலிகமாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.   திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை வடக்கு மாவட்டம், ராயபுரம் கிழக்கு பகுதி 51வது வட்டத்தை சேர்ந்த ஜி.ஜெகதீசன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Rayapuram East DMK ,Thuraimurugan , Rayapuram, East, DMK Administrator, Dismissed
× RELATED அண்ணாவின் 55வது நினைவு நாள்: பிப்ரவரி...