×

திருப்பதி கோதண்டராமர் கோயில் பிரமோற்சவத்தின் 2ம் நாளில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி

திருமலை : திருப்பதி  கோதண்டராம சுவாமி வருடாந்திர பிரம்மோற்சவத்தின்  இரண்டாவது நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவின் போது நான்கு மாடவீதியில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர்.

ேமலும்,காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை வாகன சேவைக்குப் பிறகு பால், தயிர், தேன், இள நீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஊஞ்சல் சேவையும்  இரவு 8மணி முதல் 10 மணி வரை  கோதண்டராம சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் மற்றும் அதிகாரிகள் அர்ச்சகர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.Tags : Swami ,Tirupati Gotandarama Temple ,Pramorsavam , Thirumalai: On the second day of Tirupati Gotandarama Swamy Annual Prom, I woke up yesterday morning in a small Sesha vehicle4.
× RELATED ஆனி உத்திர திருக்கல்யாண...