×

2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு - கோவை இடையே மீண்டும் பயணிகள் ரயில் சேவை இயக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஈரோடு: ஈரோடு - கோவை இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா பரவல் காரணமாக ஈரோடு - கோவை இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை திருப்பூர் மற்றும் கோவை நகரங்களுக்கு பணிக்கு சென்று வரக்கூடிய பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ரயில் நிறுத்தப்பட்டதால் கூடுதல் கட்டணத்துடன் பேருந்துகளில் சென்று வந்ததாக பயணிகள் தெரிவித்தனர். ரயில் சேவை மீண்டும் துவங்கியுள்ளதை வரவேற்கும் வகையில் பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு ரயில்களில் அனுமதிக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு-கோவை இடையிலான முன்பதிவில்லா தினசரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06801),  காலை 7.15 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, காலை 9.45 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Erode - Gove , Erode - Coimbatore, Passenger train service
× RELATED ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத்...