×

முதல்வரின் அமீரக பயணம் வெளிநாட்டு வாழ் தமிழர்களை ஈர்த்துள்ளது: டிஆர்பி ராஜா பெருமிதம்

சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டிஆர்பி ராஜா கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் வெளிநாட்டு பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில் நகரமான‌ துபாயை தேர்வு செய்ததின் மூலம் தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் நிரம்பியிருந்தது. அந்த நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. அது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்த நமது முதல்வருக்கு அந்த நாட்டு காவல்துறை அதிகாரிகள், அங்குள்ள‌ மக்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அமீரகம் வாழ் தமிழ் மக்கள் உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பை அளித்தனர். வேறு எந்த தலைவருக்கும் இந்த அளவிலான வரவேற்பு கிடைத்திருக்குமா என நினைத்து பார்க்க முடியவில்லை.

குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில் நடந்த மக்கள் சந்திப்பில் வரலாறு காணாத கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் அமீரக வாழ் இந்திய தொழிலதிபர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழகத்தில் முதலீடு செய்ய 6 நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. மேலும் பல தொழிலதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். இப்படி ஒரே பயணத்தில் பல சிக்சர்களை அடித்து வெற்றி இலக்கை நமது முதல்வர் எட்டியுள்ளார். இப்பயணம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மிகுந்த பயனளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Tags : Chief Minister ,US ,Tamils ,DRP ,Raja , Chief Minister's visit to the US has attracted Tamils living abroad: DRP Raja is proud
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்