×

வேப்பூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய எழுத்தர், தொழிலாளி கைது

வேப்பூர்:  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பிஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (44), தற்காலிக பட்டியல் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இங்கு சிதம்பரம் வட்டம் பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (45) சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். இங்கு விவசாயி அழகுவேல் நெல் கொள்முதல் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளார். அவருக்கு மார்ச் 12ம் தேதி நெல் கொள்முதல் செய்ய டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், நெல்லை கொள்முதல் செய்யாததால் பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரனிடம் கேட்டுள்ளார். அவர் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் 200 நெல் மூட்டைகளுக்கு 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையடுத்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அழகுவேல் புகாரளித்தார். அதன்பேரில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் அழகுவேலுடன் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விவசாயிகள் போன்று மாறுவேடத்தில் ெசன்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை  தூக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது அழகுவேலிடமிருந்து ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை கிருஷ்ணசாமி வாங்கி, பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரனிடம் கொடுத்துள்ளார்.உடனடியாக போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Tags : Veppur , Veppur, purchase of paddy, bribery of a farmer, arrest
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ரமலான்...