×

அமேசான் நிறுவனத்தின் புதிய சேவை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்: வேளச்சேரியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்!!

சென்னை : சென்னை பெருங்குடியில் அமேசான் நிறுவனத்தின் புதிய சேவை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பெருங்குடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் 21 லட்சம் சதுர அடியில் 18 தளங்கள் கொண்டதாக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய சேவை மையத்தின் மூலம் சுமார் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரமாக  உயர்ந்துள்ளது.  

தமிழ்நாட்டின் இது அமேசான் நிறுவனத்தின் 4வது நிறுவனம் ஆகும். இதனை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுடப துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல், அமேசான் நிருவனத்திற்க்குட்பட்ட குலோபல் ரியல் எஸ்டேட்இன் இயக்குனர் வினோத் மேத்திவ்ஸ் மற்றும் அமேசான் நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வேளச்சேரி சென்ற முதல்வர் ஸ்டாலின், காந்தி சாலை குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆலோசனை வழங்கும் குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் எஸ்தர் டப்லோ முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் செயலர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Chief Minister ,Stalin ,Amazon ,Velachery , Amazon, Company, Service, Center, Chief Stalin, Velachery
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...