×

அத்திமாஞ்சேரிப்பேட்டையில் சிசிடிவி கேமரா சேவை

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  நெசவு தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. மேலும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பிரதான சாலையில் அமைந்துள்ள அக்கிராமத்திற்கு தினந்தோறும் பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். புதிய முகங்கள் அதிக அளவில் வருவதால், சமீப காலமாக இருசக்க வாகனங்கள் திருட்டு, வழிப்பட்டு போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இந்நிலையில், கிராம மக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தவும், குற்ற செயல்கள் தடுத்து நிறுத்த ஊராட்சி நிர்வாகம் நிதியிலிருந்து சிசிடிவி (கண்காணிப்பு கேமராக்கள்) பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா பிரகாசம் தலைமையில் முக்கிய பகுதிகள் தேர்வு செய்து 28 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் கண்காணிக்கும் வகையில் தொழில் நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. இச்சேவையை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனித்  முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா பிரகாசம் சிசிடிவி சேவையை தொடங்கி வைத்தார். பொதட்டூர்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி, ஊராட்சி மன்ற துணை தலைவர் தேசப்பன், ஊராட்சி செயலாளர் பூபதி, வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Attimancheripet , At Attimancheripettai CCTV camera service
× RELATED அத்திமாஞ்சேரிப்பேட்டை அருகே ஏரி பாசன கால்வாய் மூடல்