×

அறந்தாங்கியில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட குடமுழுக்கு: பங்காரு அடிகளார் பங்கேற்பு

மதுராந்தகம்: அறந்தாங்கியில் நடந்த ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட குடமுழுக்கு விழாவில் பங்காரு அடிகளார் பங்கேற்றார்அறந்தாங்கியில் நேற்று முன்தினம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் திருக்குடமுழுக்கு விழா நடந்தது. இதில், பங்காரு அடிகளார் பங்கேற்று நடத்தி வவைத்தார். முன்னதாக, இவ்விழாவில் பங்கேற்க, கடந்த 26ம் தேதி பங்காரு அடிகளார் காரைக்குடி வந்தார். அவருக்கு, வழிநெடுகிலும் செவ்வாடை பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். பெரம்பலூரில் பங்காரு அடிகளாரை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் சந்தித்து ஆசிபெற்றனர்.இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் அறந்தாங்கி, பழைய அரசு மருத்துவமனை சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் திருக்குடமுழுக்கு விழாவில் பங்காரு அடிகளார் பங்கேற்று, கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி நடத்தி வைத்தார். கருவறையில் இருந்த ஆதிபராசக்தி சிலைக்கு, லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்தார்.

இதில், சமுதாய பணியாக ₹5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதில், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ராமச்சந்திரன் எம்எல்ஏ, ஆன்மிக இயக்க துணை தலைவர் தேவி ரமேஷ், அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண் இயக்குநர் ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, நேற்று காலை சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் அரசு மருத்துவமனை சாலையில், நகர காவல் நிலையம் எதிரே புதிதாக அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் திருக்குடமுழுக்கு விழாவை அடிகளார் நடத்தி வைத்தார். இதில், ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.Tags : Adiparasakthi Siddhar Shakti Peetha Kudamulu , அறந்தாங்கியில் Adiparasakthi Siddhar Shakti Peetha Kudamuluku: Bangaru Adigalar Participation
× RELATED சென்னை – ஹவுரா சூப்பர் பாஸ்ட் மெயில்...