மாதவரம் பேருந்து நிலையத்தில் ஆந்திராவுக்கான பஸ் சேவை முடங்கியது

சென்னை: பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது .இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்துகளில் இயக்கம் குறைந்த அளவில் காணப்பட்டது. குறிப்பாக மாதவரம் புறநகர் ஆந்திரா பேருந்து நிலையத்திலிருந்து நெல்லூர், காளஹஸ்தி போன்ற பகுதிகளுக்கு இயங்கக்கூடிய 47 பேருந்துகளில் ஒன்றுகூட இயக்கப்படவில்லை.

மேலும் இங்கிருந்து சென்னை உட்பட்ட பகுதியில் இயங்கக்கூடிய 50 மாநகர பேருந்துகளில் ஒன்றுகூட இயக்கப்படாமல் இருந்ததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் மாதவரம், மணலி, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய மாநகர பேருந்து நிலையம் எண்ணூர் பேருந்து நிலையங்களில் இருந்தும் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஆட்டோ ஓட்டுனர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ இயக்கப்படாததால் பல இடங்களில் சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: