மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்துடன் இங்கிலாந்து, ஜெர்மனியில் செவிலியர்களுக்கு வேலை

சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து நாட்டில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிவதற்கு செவிலியர்கள் IELTS/OET தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்த பட்சம் ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு மாத சம்பளம் சுமார் ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும் ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிவதற்கு ஏ1, ஏ2, பி1 நிலையில் ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்ற 42 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்,பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

இவர்களுக்கு ஆரம்ப நிலை மாத சம்பளமாக ரூ.1.5 லட்சம் வழங்கப்படும். பி2 நிலையில் ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்றவர்கள் செவிலியர்களாக பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு மாத சம்பளம் சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை வழங்கப்படும். எனவே, பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omcresume@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.com மற்றும் 044-22505886/22500417 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: