×

ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட மாலா, சௌந்தர் திங்கள்கிழமை பதவியேற்பு

சென்னை:  சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, இவர்கள் 2 ஆண்டுகள் கூடுதல் நீதிபதிகளாக பதவியில் இருப்பார்கள் என்று மத்திய அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவர்கள் இருவரும் வரும் திங்கட்கிழமை (மார்ச் 28) காலை 10 மணிக்கு நீதிபதியாக பதவியேற்கவுள்ளனர் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவித்துள்ளார். புதிய நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவிபிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.


Tags : Mala ,Soundar ,ICC , The iCourt appointed additional judges Mala, Soundar will be inaugurated on Monday
× RELATED ஆட்டோவில் பெண் தவறவிட்ட 12 சவரனை...