×

வௌிநாட்டு இந்தியர்களுக்கு ஆன்லைனில் வாக்களிக்க வசதி: தேர்தல் ஆணையத்துக்கு அரசு பரிந்துரை

புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் பேசிய ஒன்றிய சட்ட  அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘வாக்குபதிவில் முறைகேடு செய்வது மிகப்்பெரிய  குற்றம். இது போன்ற முறைகேடுகளை தடுக்க  வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்படும். கள்ள ஓட்டுகளை தடுப்பதற்கு ‘ஒரு தேசம், ஒரு வாக்காளர் பட்டியல்’ முறை கொண்டு வரப்படும்,’’ என்றார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதற்கான உரிமை அளிப்பது பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில், ‘வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றுவதற்கான உரிமை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஆன்லைனில் வாக்குப்பதிவு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது,’’ என்றார்.

Tags : Election Commission , Overseas Voting Facility for Overseas Indians: Government Recommendation to the Election Commission
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...