×

16 எல்எச்பி பெட்டிகளுடன் கன்னியாகுமரி-புனே ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 31 முதல் இயக்கம்

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: ரயில் எண்: 16382 கன்னியாகுமரி - புனே ஜங்ஷன் தினசரி எக்ஸ்பிரஸ் மார்ச் 31ம் தேதி முதல் இயக்கத்தை தொடங்குகிறது. ரயில் எண் 16381 புனே ஜங்ஷன்-கன்னியாகுமரி ரயில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது. ரயில் எண்: 16382 கன்னியாகுமரி - புனே ஜங்ஷன் தினசரி எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து மார்ச் 31 முதல் தினசரி காலை 8.25 மணிக்கு புறப்படும். மறுநாள் இரவு 10.30 மணிக்கு புனே ஜங்ஷன் சென்றடையும். இந்த ரயில் நாகர்கோவில் ஜங்ஷனில் காலை 8.40க்கு வந்து 8.45க்கு புறப்படும். இரணியலில் 9.03க்கு வந்து 9.04க்கு புறப்படும். குழித்துறையில் 9.19க்கு வந்து 9.20க்கு புறப்படும்.

பாறசாலையில் 9.29க்கு வந்து 9.30க்கு புறப்படும். நெய்யாற்றின்கரையில் 9.41க்கு வந்து 9.42க்கு புறப்படும். திருவனந்தபுரம் சென்ட்ரலில் 10.15க்கு வந்து 10.20க்கு புறப்படும். சிறையின்கீழ், கடைக்காவூர் வர்க்கலை சிவகிரி, பரவூர், கொல்லம், கருநாகப்பள்ளி, காயங்குளம், மாவேலிக்கரை, செங்கன்னூர், திருவல்லா, சங்கானச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, அங்கமாலி, சாலக்குடி, இரிஞ்ஞாலக்குடா, திருச்சூர், வடக்கஞ்சேரி, ஒற்றப்பாலம், பாலக்காடு ஜங்ஷன், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பொம்மிடி, ஜோலார் பேட்டை, காட்பாடி ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களிலும் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

மறு மார்க்கத்தில் இந்த ரயில் எண்: 16381 புனே ஜங்ஷன்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புனேவில் இருந்து ஏப்ரல் 1 முதல் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரிக்கு மூன்றாவது நாள் பகல் 12.30க்கு வந்து சேரும். இந்த ரயில் கோட்டயத்திற்கு காலை 5.52க்கு வந்து சேரும். கொல்லத்திற்கு காலை 8.12க்கும், திருவனந்தபுரத்தில் 9.25க்கும் வந்து சேரும். குழித்துறையில் காலை 10.20க்கு வந்து 10.21க்கு புறப்படும். இரணியலில் 10.39க்கு வந்து 10.40க்கு புறப்படும். நாகர்கோவில் ஜங்ஷனுக்கு காலை 11.35க்கு வந்து 11.40க்கு புறப்படும்.

இந்த ரயிலில் ஒரு 2 அடுக்கு ஏசி, 4 மூன்றடுக்கு ஏசி, 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், இரண்டு 2ம் வகுப்பு இருக்கை வசதி (முன்பதிவு இல்லாதது), ஒரு பேன்டி கார், ஒரு இரண்டாம் வுகப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் லக்கேஜ் கம் பிரேக் வேன், உட்பட 16 எல்எச்பி பெட்டிகள் இடம்பெறும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : 16 LHP Box, Kanyakumari-Pune Junction Express, Rail
× RELATED மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது...