×

வீழ்ச்சி அடையும் பூக்களின் விலை: தோவாளை மலர் சந்தையில் தாமரை, துளசி உள்பட அனைத்து மலர்களின் விலையும் கடும் சரிவு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் அனைத்து வகையான பூக்கள் விளையும் கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். தோவாளை மலர் சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், ஓசூர், பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள குமாரபுரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல டன்கள் பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாடு, கேரளா முழுவதுமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

பிப்ரவரியில் பங்குனி உத்திரம், கோவில் திருவிழாக்கள் மற்றும் தொடர் சுபமுகூர்த்த தினங்களால் பூக்களின் விலை மிகவும் உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் கடந்த பல வாரங்களாக ரூ.1,000-க்கும் மேல் இருந்த 1 கிலோ பிச்சிப்பூ ரூ.300-க்கும், மல்லிகைப்பூ ரூ.800-லிருந்து தற்போது ரூ.200-க்கு குறைந்துள்ளது. தாமரை ஒன்றின் விலை ரூ.10-லிருந்து 50 காசாகவும், துளசி ஒரு கிலோ ரூ.10-ஆகவும் சரிந்திருப்பதால் விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.    


Tags : Towala , Flowers, price, bouquet, flower market, lotus-basil, fall
× RELATED தைப்பூச திருவிழாவை ஒட்டி தோவாளை மலர்...