50 கோடியை திருப்பி கொடுத்தாரா பிரபாஸ்?

சென்னை: பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருந்தார். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான இந்தப் படம் தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதற்காக அவரிடம் விநியோகஸ் தர்கள் நஷ்டஈடு கேட்டு வருகின்றனர். இதன் காரணமாக நடிகர் பிரபாஸ் இப்படத்திற்காக தான் வாங்கிய ரூ.100 கோடி சம்பளத் தொகையில் இருந்து ரூ.50 கோடியை திருப்பிக் கொடுத்ததாக தகவல் பரவியது. ஆனால் அவரோ அல்லது தயாரிப்பு தரப்போ இதனை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Related Stories: