×

ஓமனிலிருந்து காரைக்கால் வந்த 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா: உரத்தின் தரம் குறித்து நாகை ஆட்சியர் ஆய்வு

காரைக்கால்: ஓமன் நாட்டில் இருந்து கரீப் பருவ விவசாயத்திற்கு தேவையான 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்தில் கப்பல் மூலம் வந்தடைந்தது. இந்த யூரியா உரமானது தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவில் இருக்கக்கூடிய 5 மாநிலங்களுக்கு அனுப்பப்படவுள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் உள்ள யூரியா உரத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக, மழை மற்றும் பேரிடர் காலங்களில் தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில், எதிர்காலங்களில் இந்த உரத்தட்டுப்பாடை போக்குவதற்காக விவசாயிகளின் நலன் கருதி முன்கூட்டியே உரங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக ஒன்றிய அரசிற்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

அதனை தொடர்ந்து யூரியா உரமானது இந்தியாவில் உரத்தேவை இருக்கக்கூடிய 5 மாநிலங்களுக்கும் 44 ஆயிரம் மெட்ரிக் டன் வந்தது. இதில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு மட்டும் 22 ஆயிரம் மெட்ரிக் டன் உரமானது வந்துள்ளது. இந்த யூரியாவானது தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் திருவண்ணாமலை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் 15 நாட்களில் லாரிகள் மற்றும் ரயில்கள் மூலமாக அனுப்பிவைக்கபட உள்ளது. கப்பல் மூலம் வந்த யூரியா உரம் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உரத்தை நவீன கருவிகள் மூலம் மூட்டை பிடிக்கப்பட்டு, அதனை லாரிகள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட திட்டமிட்டுள்ளது.

யூரியா மூட்டைகள் விவசாயிகளின் தேவைக்கேற்ப கரீப் பருவத்திற்கு எதிர்வரும் காலங்களில் குருவை சாகுபடியை மேற்கொள்ளவதற்கும், ஏற்கெனெவே சம்பா உள்ளிட்ட விவசாய பணிகள் முடிந்தாலும் வரும் ஆண்டுகளில் விவசாயிகளுக்கு முன்கூட்டியே யூரியா போன்ற உரங்களின் தேவை இருப்பதால் உரத்தட்டுப்பாடு தமிழகத்தில் முழுவதுமாகவே இருக்காது என்ற அறிவிப்பும் நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். வரும் 15 நாட்களில் யூரியா உரமானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.


Tags : Oman ,Karaik , Oman, Karaikal, 44 thousand metric tons, urea, quality, naga collector
× RELATED 3.1 ஓவரில் மேட்டர் ஓவர் ஓமனுக்கு எதிராக இங்கிலாந்து சாதனை வெற்றி