மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா

மேலூர் : மேலூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர்.மதுரை மாவட்டம், மேலூர் அருகே சருகுவலையபட்டி மெய்யப்பன்பட்டியில் உள்ள மெய்யப்பன் கண்மாயில், நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. பாரம்பரிய முறைப்படி கிராம மக்கள் வலை, கச்சா, ஊத்தா போன்ற உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்து சென்றனர்.

முன்னதாக ஊர் பெரியவர்கள் வெள்ளை வீச, கண்மாயை சுற்றி குவிந்திருந்த கிராம மக்கள் ஒரு சேர கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். விவசாய பணிகள் முடிவடைந்து கண்மாய், குளங்களில் நீர் வற்றி வருவதால், மேலூரை சுற்றி உள்ள பல கண்மாய்களில் தினசரி மீன்பிடி விழா நடந்து வருகிறது. இதே சருகுவலையபட்டியில் நேற்று முன்தினமும் மீன்பிடி விழா நடைபெற்றது. இந்த ஊராட்சியில் மட்டும் இதுவரை 5 கண்மாய்களில் மீன்பிடி விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: