×

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அணை பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பிய புதிய வழக்குகளில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. புதிய வழக்குகளில் தமிழ்நாடு அரசின் கருத்தை தெரிவிக்க உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரளாவில் இருந்து பல்வேறு தனிநபர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் ஏற்கனவே பல முறை விசாரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதிதாக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்ய வருகிறது. அதற்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் அணை பாதுகாப்பாக உள்ளது என விரிவான பதில் அளிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் 2014-ம் ஆண்டு உத்தரவின் படி அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவானது, அவ்வப்போது அணையை பார்வையிட்டு அணையின் உறுதி தன்மை குறித்து அறிக்கை அளித்து வருகிறது.

இந்நிலையில், இது போன்ற மனுக்கள் வேண்டும் என்றே வழக்கை திசை திருப்பும் நோக்கில் போடப்படுவதாக குற்றம் சட்டி பதில் மனுக்களை தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக மேலும் ஒரு புதிய வழக்கு தக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வழக்குகளும் இந்து விசாரணைக்கு வந்த போது தான் புதிய வழக்குகளில் தமிழ்நாடு அரசுக்கு எந்த நோட்டீஸும் அனுப்ப முடியாது என்று நீதிபதி கன்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதனை தொடந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புதிய மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.


Tags : Supreme Court ,Tamil Nadu government ,Mullaperiyaru dam , Mullaperiyaru Dam, Government of Tamil Nadu, Notice, Supreme Court denies
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு