முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றிய இளைஞரணி சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  கடந்த 2 மாதங்களாக மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரம்பாக்கம் விளையாட்டு திடலில்  நேற்று நடந்தது. சித்தாமூர் ஒன்றியக்குழு தலைவர் வி.ஏழுமலை தலைமை தாங்கினார். சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.சிற்றரசு, ஒன்றியக்குழு துணைத் தலைவர் பிரேமா சங்கர், மாவட்ட கவுன்சிலர் சாந்தி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் மு.குணசேகரன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, 70 கிலோ கேக் வெட்டினார். பின்னர், கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற கூனங்கரணை தமிழ் பசங்க அணிக்கு ரூ.70 ஆயிரம் பரிசு தொகை, கோப்பை, 2ம் இடம் பிடித்த பேரம்பாக்கம் அணிக்கு ரூ.42 ஆயிரம், 3ம் இடம் பிடித்த குரும்பிரை அணிக்கு ரூ.25 ஆயிரம், 4ம் இடம் பிடித்த பொலம்பாக்கம் அணிக்கு ரூ.10 ஆயிரம் கோப்பை வழங்கினார். மேலும், அப்பகுதியில் உள்ள சலவை தொழிலாளர்களுக்கு 10 இஸ்திரி பெட்டிகள், நலிவுற்ற 5 பெண்களுக்கு தையல் இயந்திரம், கிராம மக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சித்தாமூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் டைகர் குணா, துணை அமைப்பாளர்கள் பா.லோகநாதன், மு.கண்ணன், செ.மாரிமுத்து, தா.பூலோகம், அ.தமிழரசன் ஆகியோர் செய்தனர். இதேபோல், லத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இளைஞர் அணி பொதுக்கூட்டம் பவுஞ்சூரில் நடந்தது. இதில், கலந்து கொண்ட காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ முன்னிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

திருக்கழுக்குன்றம்: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா, இளைஞர் பாசறை கூட்டம் ஆகியவை கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கத்தில் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல்மாலிக் தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, திமுக தலைமை பேச்சாளர்கள் சைதை சாதிக், நாத்திகம் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உயிரிழந்த திமுகவினர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினர். இதில், சமூக வளைதளப்பிரிவு நிர்வாகி இளமாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், மணி, மாவட்ட பிரதிநிதிகள் கயல் மாரிமுத்து, பாஸ்கள், கோபால், ஒன்றிய துணை செயலாளர்கள் பாபு, கிருஷ்ணமூர்த்தி, திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், துணை அமைப்பாளர் மதன், ஆயப்பாக்கம் ஊராட்சி தலைவர் ஆர்த்தி பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் சுமதி ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: