×

அமெரிக்க அதிபர் ஜோபிடன், வரும் 25ம் தேதி போலாந்து நாட்டிற்கு பயணம்: உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் குறித்து பேச்சு!!

வாஷிங்டன் : ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோபிடன், வரும் 25ம் தேதி உக்ரைன் எல்லை நாடான போலாந்து நாட்டிற்கு செல்ல இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 26வது நாளாக நடந்து வருகிறது. கடந்த சில தினங்களாக ஹைப்பர் சோனிக் உள்ளிட்ட ஏவுகணை மூலம் தாக்கி வரும் ரஷ்யா மரியுபோல் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே நேட்டோ, ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்புகளின் தலைவர்களை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபிடன், அடுத்த வாரம் பெல்ஜியம் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கு பிறகு வரும் 25ன் தேதி உக்ரைனின் அண்டை நாடுகளின் ஒன்றான போலாந்திற்கு பிடன் செல்ல இருப்பதாக  வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து அண்டை நாடான போலாந்தில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதனால் போலாந்து நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் வரும் 25ம் தேதி மேற்கொள்ள உள்ள பயணத்தின் போது போலாந்து அதிபர் ஆண்ட்ரிச் டூடாவை ஜோ பைடன் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இருநாட்டு தலைவர்களும் மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் நெருக்கடி குறித்து பேச இருப்பதாக தெரிகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் மற்றும் போலாந்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற விவகாரங்களுக்கு மத்தியில் போலாந்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


Tags : US President Jobidan ,Poland ,Ukraine , US President, Jopitan, Poland, Travel
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...