மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான ஆணழகன் போட்டி: பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 180 பேர் பங்கேற்பு

மாமல்லபுரம்: உலக பிட்னஸ் பெடரேஷன் டிஎன்ஏ பிட்னஸ் ஸ்டூடியோ என்ற தலைப்பில் 2022 என்ற பெயரில், தேசிய அளவிலான ஆணழகன் போட்டி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று நடந்தது. இந்த ஆணழகன் போட்டிக்கு, உலக பிட்னஸ் பெடரேஷனின் தமிழ்நாடு மாநில தலைவர் மோகன் குமார் தலைமை தாங்கினார். தேசிய, தலைவர் திராஜ் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார்.

டிஎன்ஏ ஜிம் நிறுவனர் செல்வம் வரவேற்றார். சிறப்பு, அழைப்பாளராக மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஷ்வரன் கலந்து கொண்டு, ஆணழகன் போட்டியை துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார். இதில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, சிக்கிம், மத்திய பிரதேஷ், இமாச்சல பிரதேஷ், அசாம், பஞ்சாப், டெல்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண், பெண் என 180 பேர் இதில் பங்கேற்றனர்.  பதினான்கு, பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதில் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு முதல் பரிசு 15 ஆயிரம், இரண்டாம் பரிசு 10 ஆயிரம், மூன்றாம் பரிசு 5 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றவருக்கு 1 லட்சம் என, மொத்தம் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

Related Stories: