சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பருவம்-1க்கான தேர்வு முடிவு வெளியானது

சென்னை: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பருவம்-1க்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சிபிஎஸ்இ, 12ம் வகுப்பு பருவம்-1க்கான முடிவுகளை நேற்று வெளியிட்டது. இதனால் தேதி குறித்த பல ஊகங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு போலவே 12ம் வகுப்பு மாணவர்களும் நேரடியாக முடிவுகளை அணுக முடியாது. மத்திய வாரியம் பள்ளிகளுக்கு 1ம் பருவத்திற்கான தியரி மதிப்பெண்களை அனுப்பியுள்ளது. இதனை பள்ளிகளின் முதல்வர்கள்/ஆசிரியர்கள், அவர்களின் ‘சிக்‌ஷா’ உள்நுழைவு ஐடி மூலம் அணுகலாம்.

இந்த மதிப்பெண்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள சிபிஎஸ்இ தரப்பில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

மேலும் இதனை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக முடிவுகள் என்றும் அழைக்கவில்லை. ஏனெனில் முடிவுகள் என்பது டெர்ம்-1, டெர்ம்-2 மற்றும் நடைமுறைகள்/இன்டர்னல்களின் மொத்த மதிப்பெண்களை உள்ளடக்கும். எனவே சிபிஎஸ்இ இந்த மதிப்பெண்களை செயல்திறன் என்று வெறுமனே குறிப்பிடுகிறது. இதனால் பள்ளிகள் தங்கள் மாணவர்கள் எவ்வாறு தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதைப் பற்றிய யோசனையைப் பெற முடியும்.மாணவர்கள் தங்கள் பள்ளியை தொடர்பு கொண்டு தங்களின் பருவம் 1க்கான தியரி மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். மார்ச் 12ம் தேதி, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு 2022ம் ஆண்டு பருவம்-2க்கான வாரியத் தேர்வுக்கான தேதி தாளை வெளியிட்டது.

அதன்படி சிபிஎஸ்இ 10 மற்றும் 12க்கான பருவம்-2க்கான தேர்வுகள் வரும் ஏப்ரல் 26ம் தேதி முதல் தொடங்கும். சிபிஎஸ்இ அறிவிப்பின்படி, ஒரே ஷிப்டில் காலை 10.30 மணிக்கு தேர்வுகள் நடத்தப்படும். தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் சிபிஎஸ்இ இரு வகுப்புகளிலும் உள்ள அனைத்து பாடங்களுக்கும் இரண்டு தாள்களுக்கு இடையே அதிக இடைவெளியை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: