×

மொராக்கோவிற்கான அமெரிக்க தூதராக இந்தியர் பரிந்துரை

வாஷிங்டன்:  மொராக்கோவிற்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த புனித் தல்வாரை அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த புனித் தல்வார் வெளியுறவு துறை ஆலோசகராக இருந்து வருகிறார். வெள்ளை மாளிகை மற்றும் செனட் ஆகியவற்றின் தேசிய பாதுகாப்பு  மூத்த ஆலோசகர் மற்றும் வெளியுறவு கொள்கை பிரிவில்  உயர்மட்ட குழுவிலும் இடம்பெற்று உள்ளார். இந்நிலையில் புனித் தல்வார் மொராக்கோவிற்கான அமெரிக்க தூதராக நியமிப்பதற்கு அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.  முன்னதாக புனித் தல்வார் அரசியல்-ராணுவ விவகாரங்களுக்கான உதவி செயலாளர், அதிபரின் சிறப்பு உதவியாளர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூத்த இயக்குனர், அமெரிக்க சென்ட்டில் வெளிநாட்டு உறவுகள் குழுவில் மூத்த தொழில்முறை பணியாளர் உறுப்பினராகவும் பணியாற்றினார்.  இந்திய வம்சாவளியை சேர்ந்த புனித் தல்வார், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்கள் துறையில் முதுகலை பட்டம்  பெற்றவர்.Tags : Morocco , Indian nomination as US Ambassador to Morocco
× RELATED ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான...