×

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.2ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் தாக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டது. வீடுகள் அடியதால் மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதனால், சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆப்கானிஸ்தானில் காலை 7.23 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருட்சேதம் குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.


Tags : Afghanistan , Moderate earthquake in Afghanistan: 4.2 on the Richter scale
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி