×

திரும்ப வந்துட்டேன்: ஸ்டெயின் மகிழ்ச்சி

மும்பை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப் பந்து வீச்சு பயிற்சியாளர் டேல் ஸ்டெயின்(தென் ஆப்ரிக்கா) நேற்று மும்பை வந்து அணியுடன் இணைந்தார். இது குறித்து ஸ்டேல், ‘ஐபிஎல் அணியுடன் மீண்டும் இணைவதற்காக  இந்தியா திரும்ப வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஏற்கனவே இந்தியாவுக்கு ஐபிஎல் அணிகளுக்காகவும், தென் ஆப்ரிக்கா அணிக்காகவும் விளையாட வந்திருக்கிறேன். அதனால் விமானநிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு வாகனம் ஓட்டி வந்த போது பல நினைவுகள் வந்தன. இப்போது பயிற்சியாளர் என்ற பாத்திரத்தை ஏந்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வீரர்களை கவனிக்கும் இந்த புதிய பாத்திரம் சிறப்பானது. நானும் களத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்றார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்டேல் ஸ்டெயின் கொஞ்ச நாட்கள் வர்ணனையாளராக இருந்தார். ஏற்கனவே ஐபிஎல் தொடர்களில் ஐதராபாத், மும்பை, பெங்களூர் உட்பட பல்வேறு அணிகளுக்காக ஸ்டெயின் விளையாடி உள்ளார். சன் ரைசர்ஸ் தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடி தலைமையிலான பயிற்சிக் குழுவில்  பேட்டிங் பயற்சியாளர் பிரையன் லாரா, சுழற்பந்து பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் ஆகியோருடன் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் நேற்று இணைந்தார்.

Tags : Stein , Come back: Stein glad
× RELATED சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின்...