×

திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் திருபுவனத்தில் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான  அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி கோயிலில் உருத்திரபாதத் திருநாள் விழா கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 9ம் தேதி பெரிய கொடியேற்றமும், அதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

13ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சகோபுர தரிசனமும், 14ம் தேதி காமதேனு வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று முந்தினம் காலையில் பல்லக்கும், இரவு 8 மணிக்கு மேல் திரயோதசி திதி ஆயில்யம் நட்சத்திரம் கூடிய துலா லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து வெள்ளி மஞ்சத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Tags : Thirubuvanam Gampahahareswarar Temple , Thirubuvanam Gampahareswarar, Tirukkalyanam, Devotees, Darshan
× RELATED பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய...