×

பங்குனி உற்சவத்தை முன்னிட்டு திருமேனிநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

திருச்சுழி: திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் கோவில் மாசித் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக யாகசாலை வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. மேலும், ஒவ்வொரு நாளும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதனையடுத்து நேற்று திருமேனிநாதருக்கும் , துணை மாலையம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் பூப்பல்லாக்கில் சுவாமி திருச்சுழி முழுவதும் முக்கிய விதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீதிருமேனிநாதர் மற்றும் துணைமாலை அம்மனைத் தரிசனம் செய்தனர்.

Tags : Thirumeninathar Temple ,Panguni festival , Panguni festival, at Thirumeninathar temple, Tirukkalyanam
× RELATED கொடைக்கானலில் 22 ஆண்டுக்குப் பிறகு...