×

நத்தம் அருகே கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறி அசத்திய இளைஞர்கள்

நத்தம்: நத்தம் அருகே மணக்காட்டூரில் அமைந்துள்ள அய்யனார்சுவாமி கோயில் புரவி எடுத்தல் திருவிழா மற்றும் முத்தாலம்மன் உற்சவ விழா கடந்த ஏப்ரல் 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் கிராம தேவதைகளுக்கு கனி வைத்தல்,தோரணம் கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்றிரவு முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து அம்மன் சர்வ அலங்காரத்தில் மின் ரதத்தில் நகர் வலம் வந்தார். நேற்று முன்தினம் காலை அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து பக்தர்கள் அம்மனுக்கு முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம், பூத்தட்டு, அக்கினிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் படுகளம் போடுதல், குட்டி கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. பிற்பகலில் பந்தய கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு போட்டி போட்டு கழுமரத்தில் ஏறினர். கழுமரத்தின் உயரத்தில் ஏறி அடையாள குறியீட்டை முதலில் தொட்ட இளைஞருக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று அம்மன் பூஞ்சோலை எனும் இருப்பிடம் சென்றடைந்தார்.

The post நத்தம் அருகே கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறி அசத்திய இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Natham ,Nattam ,Puravi Tella Festival ,Muthalamman Utsava Festival of Ayyanarswamy Temple ,Manakattur ,Bava ,
× RELATED நத்தத்தில் மளிகை கடை கதவை உடைத்து ரூ.1.75 லட்சம் திருட்டு